ஒடிசாவின் பௌத்த வைர முக்கோணப் பகுதி, யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மையத்தால் இந்தியாவின் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் அமைந்துள்ள லலித்கிரி, உதயகிரி மற்றும் ரத்னகிரி ஆகிய இடங்களை உள்ளடக்கியதே இந்த பௌத்த முக்கோணப் பகுதி ஆகும்.
இந்தத் தளங்கள் தேரவாதம் (ஹீனயானம்), மகாயானம் மற்றும் வஜ்ரயான பௌத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய 1,500 ஆண்டுகால தொடர்ச்சியான பௌத்த வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.
லலித்கிரி கி.மு. 2-3 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த மிகப் பழமையான தளமாகும், மேலும் இங்கு புனித நினைவுச்சின்னப் பேழைகளைக் கொண்ட ஒரு ஸ்தூபி உள்ளது.
உதயகிரி கி.பி. 1 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை செழித்தோங்கியதுடன், பெரிய மடாலயங்களையும் பௌத்த சிற்பங்களையும் கொண்டுள்ளது.
ரத்னகிரி வஜ்ரயான (தாந்திரீக) பௌத்தத்தின் ஒரு முக்கிய மையமாக இருந்ததுடன், இது பெரும்பாலும் நாளந்தாவுடன் ஒப்பிடப்படுகிறது.