மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பிரம்மகான் வனப்பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு 200 கிலோவுக்கு மேல் எடையுள்ள நான்கு வயது ஆண் புலி ஒன்று படக்கருவி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்புலி யவத்மால் மாவட்டத்தில் உள்ள திபேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து உருவானது மற்றும் 2023 ஆம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறியது.
பீட் மாவட்டத்தை அடைவதற்கு முன்பு சந்திரபூர், தாராஷிவ், லத்தூர் மற்றும் அகில்யாநகர் வழியாக இது பயணித்துள்ளது.
பாந்தெரா டைகிரிஸ் (Panthera tigris) என்று அறிவியல் பூர்வமாக அழைக்கப்படும் புலியானது, 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
புலிகளைப் பாதுகாக்கவும் அவற்றின் வாழ்விடங்களை நிர்வகிக்கவும் இந்தியாவில் 1973 ஆம் ஆண்டில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.