TNPSC Thervupettagam

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 – சாதிவாரி கணக்கெடுப்பு முறை

February 2 , 2026 16 days 108 0
  • இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்; வீடுகளின் பட்டியல் தயாரிப்பு மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு (HLO) ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026 வரை நடைபெறும் என்ற நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (PE) பிப்ரவரி 2027-ல் நடைபெறும்.
  • வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியான கணக்கெடுப்பிற்காகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
  • சாதி வாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமான பிப்ரவரி 2027-ல் நடைபெறும்.
  • லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் பனி சூழ்ந்தப் பகுதிகளில் செப்டம்பர் 2027-ல் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டம் தொடங்குகிறது.
  • இது 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும் என்பதோடு பட்டியலின சாதிகள் (SC) மற்றும் பட்டியலின பழங்குடியினர் (ST) தவிர இதர மற்ற அனைத்து சாதிகளையும் கணக்கிடும் சுதந்திர இந்தியாவின் முதல் கணக்கெடுப்பாகும்.
  • 2011 சமூக-பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பானது (SECC) மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரம்பிற்கு வெளியே செய்யப்பட்டது.
  • இந்த முறை மேற்கொள்ளப்படும்  சாதிவாரிக் கணக்கெடுப்பு இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டத்தில் நடத்தப்பட்டு, அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
  • 2011-இன் SECC 46 லட்சத்திற்கும் மேற்பட்ட சாதிகளை கணக்கெடுத்தது, அதே சமயம் சுதந்திரத்திற்கு முந்தைய 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மொத்த சாதிகளின் எண்ணிக்கை 4,147 ஆக இருந்தது.
  • மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படுவது இதுவே (2027) முதல் முறை ஆகும்.
  • மேலும், குடிமக்கள் இணையதளத்தின் மூலம் சுயமாகத் தகவல்களைப் பதிவு செய்ய முடிவதும் இதுவே முதல் முறையாகும்.
  • இந்தியாவின் தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் ஜனவரி 22 அன்று, வீட்டுப் பட்டியல் கட்டத்திற்காக 33 வினாக்களை அறிவித்தார்.
  • இந்த வினாத்தாளில் 12வது வினாவாக “குடும்பத் தலைவர் பட்டியலின சாதியினரா / பழங்குடியினரா/மற்றவர்களா?” என்பதாகும்.
  • வினா 12, இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் பொதுப் பிரிவினரை வெளிப்படையாக உள்ளடக்கவில்லை.
  • 2011 ஆம் ஆண்டு வீட்டுப் பட்டியல் கட்டத்திற்கான அட்டவணை அல்லது வினாத் தாளிலும் இதே வினா 15வதாக  இருந்தது.
  • பட்டியல் சாதி / பழங்குடியினர் பிரிவின் விவரங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப் பட்ட பட்டியல் மூலம் இரண்டாம் கட்டத்தில் நிரப்பப்பட்டன.
  • ஓபிசி பட்டியல் மாநில மற்றும் மத்திய அரசுகளால் பராமரிக்கப்படலாம் என்றாலும், பட்டியலின சாதி / பழங்குடியினர் பெயர்கள் மத்திய அரசால் மட்டுமே பராமரிக்கப் படுகின்றன.
  • சமீபத்திய அரசாங்கத் தரவுகளின்படி, மத்தியப் பட்டியலில் சுமார் 2,650 இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினரும், பட்டியலின சாதிப் பிரிவில் 1,170 சமூகங்களும், பட்டியலினப் பழங்குடியினர் பட்டியலில் 890 சமூகங்களும் உள்ளன.
  • “மற்றவை” என்ற பத்தியில் மத்திய மற்றும் மாநில ஓபிசி பட்டியல்கள் இணைக்கப் பட்ட பட்டியல் இருக்குமா அல்லது இடஒதுக்கீடு செய்யப்படாத சாதிப் பிரிவுகளின் பட்டியல் இருக்குமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்