TNPSC Thervupettagam

இந்தியாவின் அரிய மண் தாதுப் பெருவழித்தடங்கள்

February 3 , 2026 15 days 66 0
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கனிம வளம் நிறைந்த ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு ஆதரவளிக்க முன்மொழிந்தார்.
  • இந்தியாவின் அரிய மண் காந்தங்களுக்கான விநியோகத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பிரத்தியேக அரிய மண் தாதுப் பெருவழித்தடங்கள் நிறுவப்பட உள்ளன.
  • அரிய மண் தாதுக்களுக்காக சீனா மீதான தனது சார்புநிலையைக் குறைக்க இந்தியா முயற்சிக்கும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • நவம்பர் 2025-ல், மத்திய அரசு, இந்தியாவில் அரிய மண் நிரந்தரக் காந்தங்களை (REPM) உற்பத்தி செய்வதற்காக, ₹7,280 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒரு புதிய, 'முதன்முறையான' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
  • 'வெப்பப் படுத்தப் பட்ட அரிய மண் நிரந்தரக் காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம்' என்பது, இந்தியாவில் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த அரிய மண் நிரந்தரக் காந்த (REPM) உற்பத்தியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்