TNPSC Thervupettagam

மாதவிடாய் சுகாதாரம் - அடிப்படை உரிமை

February 3 , 2026 15 days 51 0
  • அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாதவிடாய் சுகாதாரத்திற்கான உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • டாக்டர் ஜெயா தாக்கூர் எதிர் இந்திய அரசு வழக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப் பட்டது.
  • சுகாதாரப் பொருட்கள் கிடைக்காதது, அரசியலமைப்பின் 21A பிரிவின் கீழ் உள்ள கல்விக்கான அடிப்படை உரிமையையும், கல்வி உரிமைச் சட்டத்தையும் (RTE) பாதிக்கிறது.
  • மாதவிடாய் சுகாதார நடவடிக்கைகள் கிடைக்காதது, பள்ளிகளில் சமமான அடிப்படையில் பங்கேற்பதற்கான உரிமையைப் பறிக்கிறது.
  • இது அரசியலமைப்பின் 14வது பிரிவின் கீழ் உள்ள சமத்துவத்திற்கான உரிமையை மீறுகிறது.
  • 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான இளம் வயதுப் பெண் குழந்தைகளுக்கான பள்ளிகளில், மத்திய அரசின் 'பள்ளி செல்லும் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை' அகில இந்திய அளவில் செயல்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • அனைத்துப் பள்ளிகளும் ஆண் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாலின வாரியாகப் பிரிக்கப்பட்ட கழிப்பறைகள், இலவச சானிட்டரி நாப்கின்கள் (முன்னுரிமையாக விற்பனை இயந்திரங்கள் மூலம்), மற்றும் பிரத்தியேக மாதவிடாய் சுகாதார மேலாண்மைக் கூடங்களை வழங்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்