மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ல் திருத்தங்கள்
January 30 , 2019 2378 days 2844 0
இந்திய தேர்தல் ஆணையமானது (ECI – Election Commission of India) 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள முயல்கிறது.
இது தேர்தல் தொடங்குவதற்கு முன்னதான கடைசி 48 மணி நேரங்களுக்கு அச்சு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வழியாக அரசியல் விளம்பரங்கள் செய்வதற்குத் தடை விதிக்கிறது.
1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126 ஆனது தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாக 48 மணி நேரத்திற்கு (அமைதி காலத்தில்) எந்தவொரு மின்னணு ஊடகமும் அரசியல் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதைத் தடை செய்கிறது.
மேலும் ECI ஆனது கடைசி 48 மணி நேரத்தில் செய்தித் தாள்களில் வெளியிடப்படும் பிரச்சாரத் தகவல்களுக்கு முன் சான்றிதழ் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது.