உலகளாவிய தேவை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மஞ்சள் ஏற்றுமதி இந்த ஆண்டு 5% அதிகரித்துள்ளது.
ஈரோடு மஞ்சள் அதிக குர்குமின் உள்ளடக்கத்திற்கு (2.5%–3.9%) பெயர் பெற்றது மற்றும் புவிசார் குறியீட்டினைக் கொண்டுள்ளது.
இந்தப் பயிர் ஜூன்-ஜூலை ஆகிய மாதங்களில் விதைக்கப்பட்டு பிப்ரவரி-மார்ச் ஆகிய மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
தெலுங்கானாவின் நிஜாமாபாத்திற்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவது பெரிய மஞ்சள் சந்தையை ஈரோடு கொண்டுள்ளது.
இந்த மாவட்டம் ஜெர்மனி, ஈரான், ஈராக், மொராக்கோ, மலேசியா, சவுதி அரேபியா, பிரேசில், நெதர்லாந்து மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
ஈரோட்டில் மஞ்சள் சாகுபடி தமிழ்நாட்டின் 1.60 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படும் மசாலாப் பொருட்கள் சாகுபடியில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டப் பரப்பில் பயிரிடப் படுகிறது என்ற நிலையில்இதன் மூலம் ஆண்டுதோறும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பைகளை உற்பத்தி செய்கிறது.