TNPSC Thervupettagam

மணல் மற்றும் நிலைத்தன்மை அறிக்கை

May 21 , 2026 12 days 112 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டமானது (UNEP), Sand and Sustainability: An Essential Resource for Nature and Development என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது.
  • தண்ணீருக்குப் பிறகு உலகில் அதிகமாக வெட்டியெடுக்கப்படும் திடப்பொருள் மணல் என்றும், 2020 ஆம் ஆண்டில் அதன் உலகளாவிய நுகர்வு ஆண்டுக்கு சுமார் 50 பில்லியன் டன்னாக எட்டியுள்ளது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
  • மணல் அகழ்வு என்பது முக்கியமாகக் கட்டுமானம் மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக ஆற்றுப்படுகைகள், கடற்கரைகள் மற்றும் கடற்படுகைகளில் இருந்து மணலை வெட்டியெடுப்பதை உள்ளடக்கியதாகும்.
  • அதிகப்படியான மணல் அகழ்வு, ஆற்றுப்படுகை சீரழிவு, நிலத்தடி நீர்மட்டம் குறைதல், பல்லுயிர் இழப்பு மற்றும் கடலோர அரிப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.
  • செயற்கை மணலை (M-Sand) ஊக்குவிக்கவும், வலுவான விதிமுறைகளை உருவாக்கவும், சூழலியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதிகளைச் சுரங்கப் பணிகளில் இருந்து பாதுகாக்கவும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்