TNPSC Thervupettagam

இணக்கக் குறைப்பு மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கும் முன்னெடுப்பு

May 21 , 2026 12 days 62 0
  • இணக்கக் குறைப்பு மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கும் முன்னெடுப்பின் (CRDI) கீழ், கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான கட்டம் I மற்றும் கட்டம் II-இல் உள்ள அனைத்து முன்னுரிமைப் பகுதிகளையும் நிறைவு செய்த இந்தியாவின் முதல் மாநிலமாகத் திரிபுரா உருவெடுத்துள்ளது.
  • இணக்கச் சுமைகளைக் குறைக்கவும், எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்தவும் அமைச்சரவைச் செயலகத்தால் இந்த முன்னெடுப்பு வழிநடத்தப்படுகிறது.
  • நிலப் பயன்பாடு, தொழிலாளர் சட்டங்கள், சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் டிஜிட்டல் நிர்வாகம் போன்ற துறைகளை உள்ளடக்கிய அனைத்து 51 சீர்திருத்தப் பகுதிகளையும் திரிபுரா நிறைவு செய்துள்ளது.
  • வணிக சீர்திருத்தச் செயல்திட்ட மதிப்பீட்டுக் கட்டமைப்பில் இம்மாநிலம் 94% மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது.
  • 394 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மூலம் சுமார் ₹35,140 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களைத் திரிபுரா ஈர்த்துள்ளது.
  • எளிமையாக்கப்பட்ட நிலப் பயன்பாட்டு வகைகள், நெகிழ்வான மண்டல அமைப்புகள் மற்றும் நிலப் பயன்பாடு மாற்றம் (CLU) ஒப்புதல்களுக்கான சுயச் சான்றிதழ் ஆகியவை இச்சீர்திருத்தங்களில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்