ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டமானது (UNEP), Sand and Sustainability: An Essential Resource for Nature and Development என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது.
தண்ணீருக்குப் பிறகு உலகில் அதிகமாக வெட்டியெடுக்கப்படும் திடப்பொருள் மணல் என்றும், 2020 ஆம் ஆண்டில் அதன் உலகளாவிய நுகர்வு ஆண்டுக்கு சுமார் 50 பில்லியன் டன்னாக எட்டியுள்ளது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
மணல் அகழ்வு என்பது முக்கியமாகக் கட்டுமானம் மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக ஆற்றுப்படுகைகள், கடற்கரைகள் மற்றும் கடற்படுகைகளில் இருந்து மணலை வெட்டியெடுப்பதை உள்ளடக்கியதாகும்.
அதிகப்படியான மணல் அகழ்வு, ஆற்றுப்படுகை சீரழிவு, நிலத்தடி நீர்மட்டம் குறைதல், பல்லுயிர் இழப்பு மற்றும் கடலோர அரிப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.
செயற்கை மணலை (M-Sand) ஊக்குவிக்கவும், வலுவான விதிமுறைகளை உருவாக்கவும், சூழலியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதிகளைச் சுரங்கப் பணிகளில் இருந்து பாதுகாக்கவும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.