TNPSC Thervupettagam

மணிப்பூரில் 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு

September 4 , 2026 9 days 113 0
  • மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மத்திய அரசு ஒத்தி வைக்கிறது.
  • 1951-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, மாநிலத்தின் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) பணியை முதலில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து ள்ளன.
  • மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு முன்பு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) புதுப்பிக்க வேண்டும் என்று மணிப்பூர் மக்கள், குறிப்பாக மெய்தி, பாங்கல் (மெய்தி முஸ்லிம்கள்) மற்றும் நாகாக்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக உள்ள மெய்திகள், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை எதிர்த்தனர்.
  • மணிப்பூர் அரசு தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆதரவளித்து வருகிறது.
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பு, 1951-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்கவும், மியான்மரில் இருந்து சட்டவிரோத குடியேற்றம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யவும் உத்தரவுகள் கோரி மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  • முன்னதாக, செல்வாக்கு மிக்க குகி-சோ சபை தேசிய குடிமக்கள் பதிவேடு கோரிக்கையை நிராகரித்து, மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை வரவேற்றது.
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு சீட்டுகளில் இருந்து தரவுகளை மாற்ற வேண்டிய தேசிய குடிமக்கள் பதிவேடு, 1951-ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் விளைவாக இது உருவானது.
  • அனைத்து மாநிலங்களும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) தொகுக்கக் கடமைப் பட்டிருந்தன, ஆனால் அது அசாமில் மட்டுமே செய்யப்பட்டது.
  • இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 1948-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
  • அரசிதழில் ஒரு அறிவிக்கையின் மூலம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு உத்தரவிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணைப்படி, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒன்றியப் பட்டியலின் கீழ் வருகிறது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் இந்தச் செயல்பாடுகளைக் கையாளுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்