பனாஜியில் (கோவா) நடைபெற்ற மேற்கு மண்டலக் குழுவின் 24வது சந்திப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
இந்தச் சந்திப்பானது குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் டாமன் & டையூ, தாத்ரா & நாகர் ஹவேலி ஆகிய ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோராலும் கலந்து கொள்ளப்பட்டது.
5 மண்டலக் குழுக்கள் பின்வருமாறு: மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்குமற்றும் மத்தியக் குழு.
இந்தக் குழுக்கள் மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காகவும் மாநிலங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காகவும் மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956ன் கீழ் அமைக்கப்பட்டுள்ளன.