குறைந்தபட்சமாக மத்திய அரசின் ஆறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசை விட தமிழ்நாடு அரசு அதிக நிதியினைப் பங்களிக்கிறது.
தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) - இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS), இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் (IGNWPS) மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளி ஓய்வூதியத் திட்டம் (IGNDPS) ஆகிய மூன்று திட்டங்கள் இதில் அடங்கும்.
இவற்றில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- கிராமப் பகுதி, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) மற்றும் ஜல் ஜீவன் திட்டம் (JJM) ஆகியவையும் அடங்கும்.
மத்திய அரசினால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட NSAP திட்டமானது 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது.
இருப்பினும், நமது மாநில அரசானது இந்தப் பகுதியில் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது என்பதோடு மேலும் இது 1962 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தினைச் செயல்படுத்தத் தொடங்கியது.
1974 மற்றும் 1984 ஆகிய சில ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஒரு காலத்தில், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் திருமணத்திற்குப் பிறகு ஆதரவற்ற அல்லது கைவிடப் பட்டப் பெண்கள் என நான்கு வகை ஆதரவற்ற நபர்களுக்கு இந்த நலத் திட்டத்தின் நோக்கத்தினை விரிவுபடுத்தியுள்ளது.
இவை அனைத்தும் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு அகில இந்தியத் திட்டத்தில் இணைக்கப்பட்டன.