அண்மையில் நடந்த வழக்கில், தங்கள் மதத்தைத் தேர்வு செய்ய மக்களுக்குச் சுதந்திரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மதத்தை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் அரசியலமைப்பின் கீழ் மக்களுக்கு உரிமை உண்டு (பிரிவு 25).
மத நம்பிக்கை என்பது தனியுரிமைக்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும்.
அரசியலமைப்பு அமர்வின் தீர்ப்பானது ஏற்கனவே வாழ்க்கை, கௌரவம் மற்றும் சுதந்திர உரிமையுடன் இதை சமன் செய்து, தனியுரிமைக்கான உரிமையின் மீற முடியாத தன்மையை உறுதி செய்துள்ளது.