பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் (NSTL) ஆனது கண்ணி வெடி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக புதிய மனிதனைச் சுமந்துச் செல்லக் கூடிய தானியங்கி கடலடி வாகனங்களை (MP-AUVs) உருவாக்கியுள்ளது.
இந்த வாகனங்கள் பக்கவாட்டு ஸ்கேன் சோனார் மற்றும் கடலடி ஒளிப்படக் கருவிகளைப் பயன்படுத்தி கண்ணி வெடி போன்ற பொருட்களை நிகழ் நேரத்தில் கண்டறிந்து வகைப்படுத்துகின்றன.
உள்ளார்ந்தக் கற்றல் அமைப்புகள் AUV வாகனங்கள் தன்னியக்கமாக, இலக்குகளை அடையாளம் காணவும் செயல்பாட்டு முயற்சியைக் குறைக்கவும் அனுமதிக்கின்றன.
கடலடி ஒலி தொடர்பு ஆனது பல AUV வாகனங்களின் செயல்பாடுகளின் போது தரவைப் பகிர அனுமதிக்கிறது.