TNPSC Thervupettagam

மனித யானை மோதல் கட்டுப்பாட்டு மையம் - நீலகிரி

December 23 , 2025 2 days 64 0
  • மனித-யானை மோதலை நிர்வகிப்பதற்காக கூடலூர் வனப் பிரிவில் உள்ள நடுகாணி மலைத்தொடரில் ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 6 கோடி ரூபாய் செலவில் இந்த மையம் கட்டப்பட்டது.
  • மொத்தம் 46 மனித-வனவிலங்கு மோதல் (HWC) மண்டலங்கள் இங்கு அடையாளம் காணப் பட்டன.
  • 34 மண்டலங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் ஒளிப்படக் கருவிகள் மற்றும் 12 மண்டலங்களில் மேம்பட்ட AI கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன.
  • வனவிலங்குகளின் நடமாட்டம் 24 மணி நேரமும் கண்காணிக்கப் பட்டு, நிகழ்நேர எச்சரிக்கைகள் ஆனது ஒலிப்பெருக்கிகள் மற்றும் SMS மூலம் கள ஊழியர்களுக்கு அனுப்பப் படும்.
  • வனத்துறை ஆனது யானைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு கட்டணமில்லா உதவி எண் (1800-425-4353), மேம்படுத்தப்பட்ட கம்பிவடமில்லா வலையமைப்புகள், உடல் வெப்பம் கொண்டு அடையாளம் காட்டும் ஆளில்லா விமானங்கள் மற்றும் யானை கண்காணிப்புக்கான ரேடியோ கழுத்துப் பட்டைகள் ஆகியவற்றினை அறிமுகப் படுத்தியது.
  • ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான உச்ச கட்ட யானை இடம்பெயர்வு காலத்தில் கூடுதல் பணியாளர்களுடன் முன் கள ஊழியர்களை ஆதரிக்க தற்காலிக கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்