மருத்துவ ரீதியிலான கருக்கலைப்புச் சட்ட மசோதா, 2020
March 19 , 2021 1586 days 637 0
இம்மசோதா மருத்துவ ரீதியிலான கருக்கலைப்புச் சட்டம் 1971 என்ற சட்டத்தினைத் திருத்தியமைக்க உள்ளது.
இது சிறப்புப் பிரிவின் கீழ் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான உச்ச வரம்பை 20 முதல் 24 வாரங்களாக உயர்த்துவதற்கான விதிகளைக் கொண்டுள்ளது.
ஆனால் இம்மசோதா சிறப்பு பிரிவினைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பது என்றால் ஒரு மருத்துவரின் ஆலோசனை போதுமானது, 12-20 வாரங்களாக இருந்தால் இரண்டு மருத்துவர்களின் முடிவுகள் தேவை என்று கூறப்படுகிறது.
இந்த மசோதா ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 20 வாரங்கள் வரை கருக் கலைப்பு செய்யவும், மேலும் 20 முதல் 24 வாரங்களுக்கு இரண்டு மருத்துவர்கள் சேர்ந்து முடிவு செய்யவும் அனுமதிக்கிறது.
மேலும் கருவைச் சுமக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்தானச் சூழலிலும், கருவிலிருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருக்கும் போது, மனிதாபிமான அடிப்படையிலும் பாதுகாப்பான மற்றும் சட்டரீதியான கருக்கலைப்பு வசதியை பெறுவதற்கும் இந்த மசோதா உறுதி கூறுகிறது.