மறுசுழற்சி செய்யப்பட்ட PVC ரக நெகிழிகளிலிருந்து உருவாக்கப்பட்ட கடன் அட்டைகள்
December 2 , 2021 1614 days 881 0
HSBC இந்தியா என்ற நிறுவனமானது இந்தியாவில் முதன்முறையாக மறுசுழற்சி செய்யப்பட்ட PVC ரக (பாலிவினைல் குளோரைடு) நெகிழியிலிருந்து உருவாக்கப்பட்ட கடன் அட்டைகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த அட்டையானது IDEMIA எனப்படும் ஒரு உலகளாவிய அட்டைத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
இது ஒற்றைப் பயன்பாடுடைய PVC ரக நெகிழிகளைப் படிப்படியாக குறைப்பதற்குப் பங்காற்றும்.
இந்த அட்டைகள் 85% மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிகளிலிருந்துத் தயாரிக்கப் படுகின்றன.