திரிபுராவில் உள்ள மாதாபாரி சுற்றுலாச் சுற்றுவட்டத்தின் மேம்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமை தாங்கினார்.
இத்திட்டம் திரிபுராவை கலாச்சார, ஆன்மீக மற்றும் சூழல் சுற்றுலாவின் மையமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அகர்தலா, நீர் மஹால், செபாஹிஜாலா, உதய்பூர் (திரிபுர சுந்தரி கோவில் / மாதாபாரி), சாபிமுரா மற்றும் டம்பூர் ஏரி ஆகியவை இதில் அடங்கியுள்ள முக்கிய இடங்களாகும்.