TNPSC Thervupettagam

மாதிரிப் பதிவுகள் முறை

May 14 , 2020 1926 days 735 0
  • சமீபத்தில் இந்தியாவின் தலைமைப் பதிவாளர் 2018 ஆம் ஆண்டிற்கான தனது மாதிரிப் பதிவுகள் முறை (SRS - Sample Registration System) அறிக்கையில்  பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
  • இந்த விகிதங்கள் மொத்த மக்கள் தொகையில் ஆயிரம் நபர்களுக்கு என்ற அளவில் கணக்கிடப் படுகின்றது.
  • SRS என்பது தேசிய மற்றும் மாநில அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம், பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் இதர பிறப்பு மற்றும் இறப்புக் குறிகாட்டிகளின் நம்பத் தகுந்த வருடாந்திரக் கணிப்புகளை வழங்குவதற்கான மக்கட் தொகை சார்ந்த ஓர் ஆய்வாகும்.
  • இந்தியாவின் தலைமைப் பதிவு அமைப்பானது 1961 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டதாகும்.
2018 ஆம் ஆண்டு SRS-ன் சிறப்பம்சங்கள்
  • இந்தியாவின் பிறப்பு விகிதமானது 1971 ஆம் ஆண்டில் 36.9 லிருந்து 2018 ஆம் ஆண்டில் 20 ஆகக் குறைந்துள்ளது.
  • பிறப்பு விகிதமானது கடந்த 40 ஆண்டுகளாக நகர்ப்புறப் பகுதிகளுடன் ஒப்பிடப்படும் போது கிராமப்புறப் பகுதிகளில் அதிகமாக தொடர்ந்து நீடிக்கின்றது.
  • பிறப்பு விகிதத்தில் பீகார் மாநிலம் (26.2) தொடர்ந்து முதலிடத்திலும் அந்தமான் நிக்கோபர் தீவானது (11.2) கடைசி இடத்திலும் உள்ளன.
  • இந்தியாவின் இறப்பு விகிதமானது 1971 ஆம் ஆண்டில் 14.9லிருந்து 2018 ஆம் ஆண்டில் 6.2 ஆகக் குறைந்துள்ளது.
  • இந்தக் குறைவானது கிராமப்புறப் பகுதிகளில் மிக அதிக அளவில் உள்ளது.
  • சத்தீஸ்கர் மாநிலமானது 8 என்ற அளவில் மிக உயரிய இறப்பு விகிதத்தையும் தில்லியானது 3.3 என்ற அளவில் மிகக் குறைந்த இறப்பு விகிதத்தையும் கொண்டு உள்ளன.
  • பச்சிளங் குழந்தை இறப்பு விகிதமானது (IMR - Infant mortality rate) 1971 ஆம் ஆண்டுடன் ஒப்பிடப்படும் போது 129 என்ற அளவிலிருந்து தற்போது 32 ஆகக் குறைந்துள்ளது.
  • மத்தியப் பிரதேச மாநிலமானது 48 என்ற அளவில் மிக அதிக IMRயையும் நாகாலாந்து 4 என்ற அளவில் மிகக் குறைந்த IMRயையும் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்