இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையமானது (IRDAI – Insurance Regulatory and Development Authority) மாதிரி காப்பீட்டுக் கிராமங்கள் (Model Insurance Villages – MIV) எனப்படும் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
கிராம மக்களை எளிதில் பாதிக்கக்கூடிய, காப்பீடு பெறும் வகையிலான பெரிய ஆபத்துகளிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான விரிவான ஒரு காப்பீட்டு வசதியினை வழங்குவதும் அந்தக் காப்பீட்டு வசதிகளை மலிவான விலையில் கிடைக்கச் செய்வதுமே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதற்கான ஒரு முக்கிய நோக்கமாகும்.
இத்தகைய மாதிரி காப்பீட்டுக் கிராமங்கள் வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடரினால் ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியாவில் தற்போது வரை பேரிடர் காப்பீட்டுத் திட்டமானது நடைமுறையில் இல்லை.