June 5 , 2021
1522 days
619
- அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் மாதிரி வாடகைச் சட்டத்தை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 2019 ஆம் ஆண்டு மாதிரி வாடகைச் சட்டமானது வாடகைச் சந்தைகளை மறுசீரமைப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
- இந்தச் சட்டத்தை உருவாக்குவது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2019 ஆம் ஆண்டு நிகழ்த்திய நிதிநிலை அறிக்கை உரையில் அறிவித்தார்.
- இந்தியாவிலுள்ள பழமையான வாடகைச் சட்டங்களை மாற்றி அமைக்கவும் வீடு கிடைப்பதில் உள்ள சிரமங்களைக் களையவும் இந்தச் சட்டம் முனைகிறது.
- “2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி” எனும் இலக்கை அடைய இந்தச் சட்டம் உதவும்.
Post Views:
619