மாநிலங்களவையின் விதிமுறைப் புத்தகத்தின் 267வது விதி
December 23 , 2022 947 days 440 0
மாநிலங்களவையின் விதிமுறைப் புத்தகத்தின் 267வது விதிமுறையானது, மேல் அவையில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
ஏனெனில், குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஒரு அறிக்கை கூட ஏற்கப் படவில்லை.
மாநிலங்களவையின் விதிமுறைப் புத்தகத்தின் 267வது விதிமுறையானது, அவைத் தலைவரின் ஒப்புதலுடன், சபையில் முன்னதாக தீர்மானிக்கப்பட்ட செயல்பாட்டு நிரலை இடைநிறுத்துவதற்கு வேண்டி மாநிலங்களவையின் உறுப்பினருக்கு ஒரு சிறப்பு அதிகாரத்தினை வழங்குகிறது.
வேறு எந்த வகையான விவாதமும் அவையின் மற்ற நடைமுறையினை இடை நிறுத்தம் செய்யாது.
267வது விதிமுறையின் கீழ் ஒரு பிரச்சினை ஏற்றுக் கொள்ளப் பட்டால், அது அன்றைய மிக முக்கியமான தேசியப் பிரச்சினை என்பதைக் குறிக்கிறது.
மேலும், 267வது விதிமுறையின் கீழ், அவை விவாதத்தின் போது இதற்கான ஒரு விளக்கத்தினை அளிப்பதன் மூலம் அரசு இந்த விவகாரத்திற்குப் பதிலளிக்க வேண்டும்.
கடைசியாக 2016 ஆம் ஆண்டில் அப்போதைய அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி "பண மதிப்பு நீக்கம்" குறித்த விவாதத்திற்கு அனுமதி வழங்கினார்.