2023 ஆம் ஆண்டு நகர்ப்புறம் 20 என்ற நிகழ்ச்சியானது, இந்தியாவின் G20 அமைப்பின் தலைமையின் கீழ் அகமதாபாத் நகரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புறம் 20 (U20) என்பது G20 அமைப்பின் ஈடுபாட்டுக் குழுக்களில் ஒன்றாகும்.
பருவநிலை மாற்றம் மற்றும் சமூக உள்ளடக்கம் உள்ளிட்ட நகர்ப்புற மேம்பாட்டின் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் பற்றிய விவாதங்களை மேற்கொள்ளும் ஒரு செயல்முறையினை எளிதாக்குவதற்கு G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளில் உள்ள நகர நிர்வாகங்களுக்கு இது ஒரு தளத்தை வழங்குகிறது.
G20 அமைப்பின் இந்தியாவின் தலைமையின் கீழ், அகமதாபாத் இந்த நிகழ்ச்சியினை நடத்தும் நிலையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தினால் இது ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் தவிர, C40 (பருவநிலை 40), UCLG (ஒருங்கிணைந்த நகரங்கள் உள்ளாட்சி அரசுகள்) அமைப்பின் உறுப்பினர் நகரங்கள் மற்றும் பார்வையாளர்களாக உள்ள நகரங்களின் மேயர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.