யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளங்களின் தற்காலிகப் பட்டியலில் இந்தியாவினைச் சேர்ந்த மேலும் மூன்று தளங்கள் சேர்க்கப் பட்டுள்ளன.
குஜராத்தின் வாத்நகர் நகரம் மற்றும் மோதேராவில் உள்ள புகழ்பெற்ற சூரியன் கோவில் ஆகியவை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
திரிபுராவின் உனகோட்டி பாறை வெட்டுச் சிற்பங்கள் ஆகியவை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
வாத்நகர் ஆனது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த ஊர் என்றும் அறியப் படுகிறது.
வாத்நகரின் வரலாறு கி.மு. 8 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது.
யுனெஸ்கோ அமைப்பின் இந்தத் தற்காலிகப் பட்டியல் ஆனது ஒவ்வொரு உறுப்பினர் நாடுகளும் இந்தப் பட்டியலில் குறிப்பிடப் படுவதற்காக பரிசீலிக்க விரும்பும் இடங்களின் தொகுப்பாகும்.