மாநிலங்களவை தொடங்கிய கடந்த 67 ஆண்டுகளில் தற்பொழுது முதன்முறையாக 'சந்தாலி' மொழி இந்த அவையில் பேசப்பட்டுள்ளது.
பாஜக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சரோஜினி ஹெம்ப்ரம் என்பவர் பழங்குடியினச் சமூகமான சந்தாலர்களின் மொழியில் மாநிலங்களவையில் பேசினார்.
சுழிய நேரக் கேள்வி - பதில்களை (குறிப்புகளை) அதிகப்படுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்துமாறு இந்த அவையின் தலைவரான எம்.வெங்கையா நாயுடு ஊக்குவித்துள்ளார்
இதன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிபெயர்ப்புகள் மற்ற உறுப்பினர்களுக்கு தலையணி கேட்பொறியின் மூலம் கிடைப்பதை இவர் உறுதி செய்துள்ளார்.