2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையேயான முதலாவது புலிகள் இடமாற்றத் திட்டத்தின் ஒரு அங்கமாக மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஒடிசாவிற்கு இடமாற்றம் செய்யப் பட்ட சுந்தரி எனும் புலி சமீபத்தில் மீண்டும் மத்தியப் பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தது.
5 வயதான இந்தப் புலி ஒடிசாவிலுள்ள சத்கோசியா புலிகள் காப்பகத்தில் 28 மாதங்கள் அடைபட்டிருந்தது.
புலிகள் இடமாற்ற திட்டம்
இத்திட்டம் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் கான்ஹா புலிகள் காப்பகத்திலிருந்து ஒரு ஆண் (மகாவீர்) புலியும் பாந்தவ்கர் புலிகள் காப்பகத்திலிருந்து ஒரு பெண் (சுந்தரி) புலியும் ஒடிசாவிலுள்ள சத்கோசியா புலிகள் காப்பகத்திற்கு அம்மாநிலத்தின் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக கொண்டு வரப்பட்டன.
மகாவீர் வந்து சேர்ந்த அடுத்த ஒரு வாரத்தில் சுந்தரி சத்கோசியாவிற்கு கொண்டு வரப் பட்டது.
இடமாற்றம் இரண்டு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது.
அதிகப் புலிகள் எண்ணிக்கையுடைய பகுதிகளில் புலிகளுக்கிடையேயான முக்கிய எல்லைச் சிக்கல்களைக் குறைப்பதற்காக புலிகளின் எண்ணிக்கையை குறைத்தல்.
பல்வேறு காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள பகுதிகளில் மீண்டும் புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்.