- இந்தியாவில் 18.05 லட்சம் காசநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
- மேலும் ஜனவரி 2020 மற்றும் பிப்ரவரி 2020 ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் காசநோய் பாதிப்புகள் ஆண்டுக்கு 6% அதிகரித்துள்ளதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.
- 2019 ஆம் ஆண்டில் பதிவான 24.04 லட்சங்கள் பாதிப்பில் சிகிச்சைப் பலன் வீதம் 82% எனவும், இறப்பு வீதம் 4% எனவும் இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
- இந்த அறிக்கையின்படி, அடுத்தடுத்த நிலைகளில் 4% நோயாளிகளும் சிகிச்சைப் பலனளிக்காமை மற்றும் சிகிச்சை முறை மாற்றங்களினால் 3% நோயாளிகளும் இறந்துள்ளனர்.
இந்தியாவில் காசநோய் பாதிப்பு
- உலகெங்கிலும் சேர்த்து, இந்தியாவில் தான் அதிக காசநோய் பாதிப்புகள் உள்ளன. இந்தியாவில் 2.64 மில்லியன் காசநோய் நோயாளிகள் உள்ளனர்.
- இது உலகின் மொத்த காசநோய் பாதிப்பில் 30% ஆகும்.
- உலகளவிலான இலக்கான 2030 ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழிப்பதனை இந்தியா இலக்காக கொண்டுள்ளது.