TNPSC Thervupettagam

100க்கும் அதிகமான வரைகதை புத்தகங்கள்

March 28 , 2021 1561 days 789 0
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உருவாக்கப்பட்டு NCERT அமைப்பால் சீரமைக்கப்பட்ட  100க்கும் அதிகமான வரைகதை புத்தகங்களை வெளியிட்டார்.
  • இப்புத்தகங்களை எந்தவொரு ஆன்டிராய்டு திறன்பேசியிலும் தீக்சா இணையதளம் வாயிலாகவோ (diksha.gov.in) (அ) தீக்சா செயலி மூலமாகவோ அணுக இயலும்.
  • இந்தப் புத்தகங்களை வாட்ஸ்அப் செயலி மூலம் இயக்கப் படும் ஒரு புதிய சாட்பாட் என்ற உதவியாளர் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இந்த சாட்பாட் டிஜிட்டல் மூலமாக கற்றலின் நோக்கத்தை விரிவாக்க ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.
  • அப்புத்தகங்களின் வெளியீட்டின் போது CBSEயின் போட்டித்தன்மை அடிப்படையிலான கல்வித் திட்டத்தின் ஓர் அங்கமாக அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில வகுப்புகளுக்கான CBSE மதிப்பீட்டுக் கட்டமைப்பினையும் கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்