மாநிலங்களுக்கிடையேயான பெயர்வுத் திறன் – உணவுப் பொருள் வழங்கல் அட்டை
October 5 , 2019 2130 days 733 0
2020 ஆம் ஆண்டு ஜூன் 1க்குள் நாடு முழுவதும் “ஒரே தேசம் ஒரே உணவுப் பொருள் வழங்கல் அட்டையை” செயல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பின்வரும் மாநிலங்களுக்கிடையே உணவுப் பொருள் வழங்கல் அட்டையின் பெயர்வுத்திறனை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
ராஜஸ்தான்/ ஹரியானா
தெலுங்கானா - ஆந்திரா
மஹாராஷ்டிரா – குஜராத்
இது ராஜஸ்தான்/ஹரியானா, தெலுங்கானா/மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா/குஜராத்தில் வசிக்கும் பயனாளிகள் தங்கள் மாநிலத்தில் உள்ள பொது விநியோக முறையின் கீழ் தங்களது உணவுப் பொருட்களை மேற்கூறிய ஏதேனும் ஒரு மாநிலத்தில் பெற்றுக் கொள்வதைக் குறியிட்டுக் காட்டுகின்றது.
மாநிலங்களுக்கு இடையேயான பெயர்வுத் திறன் திட்டமானது மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் என்பவரால் தொடங்கப்பட்டது.