TNPSC Thervupettagam

மாநில திட்டக்குழுவின் அறிக்கைகள்

March 12 , 2026 5 days 120 0
  • அரசுத் திட்டங்கள் மற்றும் வளர்ந்து வரும் துறைகள் குறித்த 15 ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளை மாநில திட்டக்குழு (SPC) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
  • திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் வழங்கியுள்ள இந்த அறிக்கைகள் மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை வலுப்படுத்துவதற்கான கொள்கை ஆலோசனைகளை வழங்குகின்றன.
  • இந்த ஆய்வுகள் தடகள வீரர்களின் வளர்ச்சி, போட்டித் திறன் மற்றும் விளையாட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராய்ந்தன.
  • இந்தியாவின் 89 சதுரங்க கிராண்ட்மாஸ்டர்களில் 36 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டு உலக சதுரங்கச் சாம்பியன்கள் இம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
  • பாரிஸ் பாராலிம்பிக்ஸில் 4 பதக்க வெற்றியாளர்களையும், பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 12 வீரர்களையும் (6 தடகள வீரர்கள் உட்பட) தமிழ்நாடு பங்களிக்கச் செய்தது.
  • தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு எதிர்காலப் பணியாளர்கள் குறித்த மற்றொரு ஆய்வு, அனைத்து நிலைப் பணியாளர்களையும் AI காலத்திற்குத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • தமிழ்நாட்டில் உள்ள Gig தொழிலாளர்களின் நிலை குறித்து விரிவான ஆய்வை திட்டக் குழு நடத்தியது.
  • இல்லம் தேடிக் கல்வி 2.0, தமிழ்ப் புதல்வன் திட்டம் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மதிப்பீடு ஆகியவற்றின் தாக்கம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்