மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பிரஸ்ஸல்ஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாம்பழத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
பெல்ஜியத்தில் இத்திருவிழா நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஐரோப்பியர்கள் மத்தியில் இந்திய மாம்பழங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதும், இந்திய மாம்பழங்களுக்கான சந்தையை ஐரோப்பாவில் உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.
இந்தியா உலகின் பிற பகுதிகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆனால் பெரும்பாலான மாம்பழங்கள் ஐரோப்பாவை சென்றடைவதை விட மத்தியக் கிழக்கு நாடுகளையே அதிகம் சென்றடைகின்றன.