மாற்று முதலீட்டு நிதிகளுக்கான GARUDA பசுமை வழித்தட பொறிமுறை
May 17 , 2026 15 days 75 0
மாற்று முதலீட்டு நிதிகளுக்கான (AIFs) 'கருடா' என்ற பசுமை வழித்தட பொறி முறையை இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) முன்மொழிந்து உள்ளது.
'பசுமை வழித்தடம்: ஆவண ஏற்பளிப்பைத் தொடர்ந்து AIF அறிமுகம்' என்பது GARUDAவின் விரிவாக்கமாகும்.
இந்த முன்மொழிவு, பங்கு ஒதுக்கீட்டு குறிப்பாணைத் (PPM) தாக்கல் செய்யப்பட்ட பிறகு AIF திட்டத்தைத் தொடங்குவதற்கான கால அவகாசத்தை 30 நாட்களில் இருந்து 10 வேலை நாட்களாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
AIF-கள் என்பவை செபி (மாற்று முதலீட்டு நிதிகள்) விதிமுறைகள், 2012-இன் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் தனிப்பட்ட முறையில் திரட்டப்பட்ட முதலீட்டு நிதிகள் ஆகும்.
ஏஞ்சல் நிதிகள் மற்றும் தகுதிவாய்ந்த முதலீட்டாளர்கள் மட்டுமே பங்கேற்கும் திட்டங்கள், செபியிடம் நேரடியாக PPM தாக்கல் செய்தவுடன் உடனடித் தொடக்க அனுமதியைப் பெறலாம்.