யவாரி-தபிச்சே பிராந்திய வழித்தடமானது எண்ணெய் விரிவாக்கம், மரங்கள் வெட்டுதல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக ஒரு புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
இந்த வழித்தடம் பெரு-பிரேசில் எல்லையில் அமேசான் பிராந்தியத்தில் முன் மொழியப் பட்ட 16 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
இது 'தன்னார்வ தனிமைப்படுத்தல் மற்றும் ஆரம்பகாலத் தொடர்பில் உள்ள பழங்குடியின மக்களின்' (PIACI) உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இடமாகும்.
இப்பகுதி ஒரு முக்கியமான கார்பன் தேக்கம் மற்றும் மிக உயர்ந்த பிரைமேட் (மனிதக்குரங்கு வகை) பல்லுயிர்த்தன்மை கொண்ட ஒரு முக்கிய பல்லுயிர் மையம் ஆகும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள் இந்த வழித்தடத்தின் 10%-க்கும் அதிகமான பகுதியை ஆக்கிரமித்துள்ளதால், வெப்பமண்டலக் காடுகளின் பெரும் பகுதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மரங்கள் வெட்டும் நடவடிக்கைகள் இந்த வழித்தடத்தின் பெரு நாட்டின் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிகளையும் பாதிக்கின்றன.