TNPSC Thervupettagam

மாற்று முதலீட்டு நிதிகளுக்கான GARUDA பசுமை வழித்தட பொறிமுறை

May 17 , 2026 15 days 74 0
  • மாற்று முதலீட்டு நிதிகளுக்கான (AIFs) 'கருடா' என்ற பசுமை வழித்தட பொறி முறையை இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) முன்மொழிந்து உள்ளது.
  • 'பசுமை வழித்தடம்: ஆவண ஏற்பளிப்பைத் தொடர்ந்து AIF அறிமுகம்' என்பது GARUDAவின் விரிவாக்கமாகும்.
  • இந்த முன்மொழிவு, பங்கு ஒதுக்கீட்டு குறிப்பாணைத் (PPM) தாக்கல் செய்யப்பட்ட பிறகு AIF திட்டத்தைத் தொடங்குவதற்கான கால அவகாசத்தை 30 நாட்களில் இருந்து 10 வேலை நாட்களாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • AIF-கள் என்பவை செபி (மாற்று முதலீட்டு நிதிகள்) விதிமுறைகள், 2012-இன் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் தனிப்பட்ட முறையில் திரட்டப்பட்ட முதலீட்டு நிதிகள் ஆகும்.
  • ஏஞ்சல் நிதிகள் மற்றும் தகுதிவாய்ந்த முதலீட்டாளர்கள் மட்டுமே பங்கேற்கும் திட்டங்கள், செபியிடம் நேரடியாக PPM தாக்கல் செய்தவுடன் உடனடித் தொடக்க அனுமதியைப் பெறலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்