மாற்று முதலீட்டு நிதியங்களுக்கான GARUDA கட்டமைப்பு
June 30 , 2026 83 days 245 0
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆனது மாற்று முதலீட்டு நிதியங்களுக்கான (AIF) GARUDA கட்டமைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆவண ஒப்புகையின் மீதான AIF வெளியீடு எனப்படும் கருடா (GARUDA - பசுமை வழித் தடம்: ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் AIF-ஐச் செயல்படுத்துதல்) வழக்கமான AIF திட்டங்களுக்கான வெளியீட்டு காலக்கெடுவை சுமார் 30 நாட்களிலிருந்து 10 வேலை நாட்களாகக் குறைக்கிறது.
அங்கீகாரம் பெற்ற முதலீட்டாளர் மட்டுமே பங்கேற்கும் திட்டங்கள் மற்றும் ஏஞ்சல் நிதியங்கள் ஆகியன அவற்றின் ஆவணங்களை செபி அங்கீகரித்த உடனேயே தொடங்கப் படலாம்.
மாற்று முதலீட்டு நிதியங்கள் (AIFs) என்பவை செபி (மாற்று முதலீட்டு நிதியங்கள்) விதிமுறைகள், 2012-இன் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் தனியார் முதலீட்டுத் தொகுப்பு அமைப்புகளாகும்.
2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்ட கலந்தாலோசனை அறிக்கையின் மூலம் இந்தக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, செபி (மாற்று முதலீட்டு நிதியங்கள்) விதிமுறைகள், 2012-இல் திருத்தம் செய்வதன் மூலம் செயல்படுத்தப் பட்டது.