TNPSC Thervupettagam

மாற்று முதலீட்டு நிதியங்களுக்கான GARUDA கட்டமைப்பு

June 30 , 2026 8 days 126 0
  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆனது மாற்று முதலீட்டு நிதியங்களுக்கான (AIF) GARUDA கட்டமைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆவண ஒப்புகையின் மீதான AIF வெளியீடு எனப்படும் கருடா (GARUDA - பசுமை வழித் தடம்: ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் AIF-ஐச் செயல்படுத்துதல்) வழக்கமான AIF திட்டங்களுக்கான வெளியீட்டு காலக்கெடுவை சுமார் 30 நாட்களிலிருந்து 10 வேலை நாட்களாகக் குறைக்கிறது.
  • அங்கீகாரம் பெற்ற முதலீட்டாளர் மட்டுமே பங்கேற்கும் திட்டங்கள் மற்றும் ஏஞ்சல் நிதியங்கள் ஆகியன அவற்றின் ஆவணங்களை செபி அங்கீகரித்த உடனேயே தொடங்கப் படலாம்.
  • மாற்று முதலீட்டு நிதியங்கள் (AIFs) என்பவை செபி (மாற்று முதலீட்டு நிதியங்கள்) விதிமுறைகள், 2012-இன் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் தனியார் முதலீட்டுத் தொகுப்பு அமைப்புகளாகும்.
  • 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்ட கலந்தாலோசனை அறிக்கையின் மூலம் இந்தக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, செபி (மாற்று முதலீட்டு நிதியங்கள்) விதிமுறைகள், 2012-இல் திருத்தம் செய்வதன் மூலம் செயல்படுத்தப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்