TNPSC Thervupettagam

மிகப்பெரிய எத்தனால் எரிபொருள் மூலம் - சோளம்

May 20 , 2026 12 days 87 0
  • 2025–26 எத்தனால் விநியோக ஆண்டில் (ESY), இந்தியாவில் எத்தனால் உற்பத்தி செய்வதற்கான மிகப்பெரிய மூலப்பொருளாக சோளம் உருவெடுத்துள்ளது.
  • எத்தனால் விநியோக ஆண்டின் (ESY) 2025-26 இன் முதல் பாதியில் இந்தியா 182 கோடி லிட்டர் சோளம் சார்ந்த எத்தனாலை உற்பத்தி செய்துள்ளது.
  • எத்தனாலானது கரும்பு மற்றும் தானிய வகை மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் நிலையில் இதில் சோளம் முதன்மையான தானியப் பங்களிப்பாளராக மாறியுள்ளது.
  • கரும்புடன் ஒப்பிடும் போது சோளத்திற்கு குறைந்த பாசன நீரே தேவைப்படுகிறது, மேலும் இதன் வளர்ச்சி சுழற்சியும் குறுகியதாகும்.
  • இந்தியாவின் 'E20' இலக்கானது, பெட்ரோலுடன் 20% எத்தனாலைக் கலப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எத்தனால் உற்பத்தியை ஆதரிப்பதற்காக, உத்திரப் பிரதேசம் 2026–27 ஆம் ஆண்டில் சோளச் சாகுபடியை 11.3 லட்சம் ஹெக்டேராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்