சமூக பாதுகாப்புச் சட்டம் 2020-இன் கீழ், கட்டுமானச் செலவுகளுக்கு 1% தொழிலாளர் நல வரி விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நல வரி, கட்டிட மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக முதலாளிகளால் செலுத்தப் படும் மொத்த கட்டுமானச் செலவின் மீது விதிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 21 முதல், ₹50 லட்சத்திற்கும் குறைவான செலவில் வீடு கட்டும் தனிநபர்களுக்கு இந்த நல வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நல வரி நிதியானது, கட்டுமானத் தொழிலாளர்களுக்கான மருத்துவ உதவி, காப்பீடு, நிதியுதவி மற்றும் கல்விச் சலுகைகள் போன்ற நலத்திட்டங்களுக்காகப் பயன் படுத்தப் படுகிறது.
இந்த நல நிதி, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 'கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியங்களால்' நிர்வகிக்கப்படுகிறது.
சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020 இன் பிரிவு 100(1) ஆனது, இந்த கட்டுமான நல வரி விதிப்பிற்கான சட்டப்பூர்வ அடிப்படையை வழங்குகிறது.