பால்வெளி அண்டத்திற்குள் 'லோகி' என்று பெயரிடப்பட்ட மறைந்திருக்கும் ஒரு பழங்கால குள்ள விண்மீன் மண்டலம் இருப்பதை அறிவியலாளர்கள் முன் மொழிந்து உள்ளனர்.
குள்ள விண்மீன் மண்டலம் என்பது பால்வெளி போன்ற பெரிய விண்மீன் மண்டலங்களை விட குறைவான விண்மீன்களையும், குறைந்த நிறையும் கொண்ட ஒரு சிறிய விண்மீன் மண்டலமாகும்.
அறிவியலாளர்கள் நிறமாலைக்காட்டி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சூரியனில் இருந்து 2 கிலோபார்செக் தொலைவிற்குள் அமைந்துள்ள 20 பழமையான உலோகக் குறைபாடுள்ள விண்மீன்களை ஆய்வு செய்தனர்.
இந்த விண்மீன்கள் நேர்முக இயக்கம் மற்றும் எதிர்முக இயக்கம் ஆகிய இரண்டையும் காட்டின; அதாவது அவை பால்வெளியின் சுழற்சியுடனும் அதற்கு எதிராகவும் இயங்குகின்றன.
சூப்பர்நோவாக்கள் மற்றும் நியூட்ரான் விண்மீன் இணைப்புகளிலிருந்து உருவான வேதி தனிமங்களை ஆராய, இந்த ஆய்வில் 'ESPaDOnS' என்ற உயர்-தெளிவுத்திறன் கொண்ட ஸ்பெக்ட்ரோபோலரிமீட்டர் பயன்படுத்தப்பட்டது.