TNPSC Thervupettagam

மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் 2025

August 19 , 2025 2 days 30 0
  • ஹுருன் இந்தியா 2025 ஆம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் பட்டியலானது, பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் மற்றும் ஹுருன் இந்தியா நிறுவனத்தினால் வெளியிடப்படுகின்றது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அம்பானி குழுமம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 28.23 லட்சம் கோடி மதிப்பீட்டில் முதலிடத்தில் உள்ளது.
  • ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார மங்கலம் பிர்லா குடும்பம் 6.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • JSW குழுமத்தின் ஜிண்டால் குடும்பம் ₹5.71 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் முதல் முறையாக (மூன்றாவது) முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்தது.
  • கடைசியில், அனில் அகர்வால் குடும்பம் (இந்துஸ்தான் சிங்க்) 2.55 லட்சம் கோடி ரூபாயுடன் 9வது இடத்தையும், டானி, சோக்ஸி & வக்கீல் குடும்பங்கள் (ஆசியன் பெயிண்ட்ஸ்) 2.21 லட்சம் கோடி ரூபாயுடன் 10வது இடத்தையும் பிடித்தன.
  • முதல் 300 இந்திய குடும்ப வணிகங்களின் மொத்தச் சொத்துக்கள் 1.6 டிரில்லியன் டாலர் அல்லது 134 லட்சம் கோடி ரூபாயாக உள்ளன என்ற நிலையில் இது துருக்கி மற்றும் பின்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்