TNPSC Thervupettagam

மின்கலங்களுக்கான ஆதார் எண்

January 10 , 2026 2 days 47 0
  • மின்சார வாகனங்களின் (EV) மின்கலங்களுக்கான தனித்துவமான ஆதார் போன்ற அடையாள அமைப்பை போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
  • வரைவு வழிகாட்டுதல்களின் கீழ், ஒவ்வொரு EV மின்கலங்களுக்கும் உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளரால் 21 எழுத்துகள் கொண்ட மின்கல ஆதார் எண் (BPAN) ஒதுக்கப் பட வேண்டும்.
  • BPAN அமைப்பு மூலப்பொருள் பிரித்தெடுத்தல் மற்றும் உற்பத்தி முதல் பயன்பாடு, மறு சுழற்சி மற்றும் இறுதிக் கட்ட அகற்றல் வரை மின்கலங்களை மிக முழுமையாகக் கண்காணிக்க அனுமதிக்கும்.
  • அவற்றைக் கண்காணிப்பதற்காக உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் அதிகாரப்பூர்வ BPAN வலை தளத்தில் மின்கலத்தின் மாறுநிலை தரவையும் பதிவேற்ற வேண்டும்.
  • ஒரு மின்கலம் மறுசுழற்சி செய்யப்பட்டாலோ அல்லது மீண்டும் அது பயன்படுத்தப் பட்டாலோ, அதே அல்லது ஒரு புதிய தயாரிப்பாளரால் ஒரு புதிய BPAN வழங்கப்படும்.
  • இந்த அமைப்பு மின்கலச் சூழல் அமைப்பில் மறுசுழற்சி திறன், ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் நிலைத் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்