மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர், புது டெல்லியில் IS 19262:2025 என்ற மின்சார வேளாண் பயன்பாட்டு இழுவை வாகனங்கள் (டிராக்டர்) சோதனைக் குறியீட்டை வெளியிட்டார்.
இந்திய தரநிலை (IS) ஆனது இந்தியத் தரநிலைகள் வாரியத்தினால் (BIS) உருவாக்கப் பட்டது.
சீரான சோதனை நெறிமுறைகள் மூலம் வேளாண் பயன்பாட்டிற்கான மின்சார இழுவை வாகனங்களின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
IS 19262:2025 ஆனது PTO சக்தி, இழு தண்டு திறன், மண்டலங்கள் மற்றும் கப்பிகளின் செயல்திறன், அதிர்வு அளவீடு மற்றும் கூறுகள் மற்றும் ஒருங்கு சேர்ப்புகளின் ஆய்வுக்கான சோதனைகளைக் குறிப்பிடுகிறது.
இந்தத் தரநிலை IS 5994:2022 - வேளாண் பயன்பாட்டு டிராக்டர்கள்: சோதனைக் குறியீடு மற்றும் தொடர்புடைய வாகனத் தரநிலைகள், மின்சார இழுவை வாகனங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டது.
மின்சார இழுவை வாகனங்கள் டீசல் என்ஜின்களுக்குப் பதிலாக மின் கலன்களில் இயங்கும் மின்சார மோட்டார்களைப் பயன்படுத்துவதால் அவை குறைக்கப்பட்ட உமிழ்வு, குறைந்த இயக்கச் செலவுகள், அமைதியான செயல்பாடு மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகியவற்றை வழங்குகின்றன.