மின்னணுப் பழுதுபார்ப்புத் துறைக்கான சோதனைத் திட்டம்
June 6 , 2023 931 days 483 0
உலகளாவிய மின்னணுப் பழுதுபார்ப்புத் துறையில் 20% பங்கினைக் கைப்பற்றுவதை ஒரு நோக்கமாகக் கொண்ட 2 மாத கால சோதனைத் திட்டத்தை அரசாங்கம் தொடங்கி உள்ளது.
இது சுங்கம் மற்றும் மின்னணுக் கழிவு விதிகளை தளர்த்துவதன் மூலமும், பிற பிராந்தியங்களில் இருந்து கொண்டு வரப்படும் நுகர்வோர் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு உபகரணங்களைப் பழுதுபார்ப்பதற்கு இந்திய நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலமும் மேற்கொள்ளப் படுகிறது.
இந்தியாவை உலகின் உலகளாவியப் பழுதுபார்ப்பு மையமாக மாற்றுவதற்கான முதல் படியாக இது கருதப்படுகிறது.
பழுதுபார்ப்புச் சேவைகளைப் பொறுத்தவரையில், இந்தியாவானது சீனாவை விட 57% அளவினையும் மலேசியாவை விட 26% அளவில் குறைவான செலவின வாய்ப்பினையும் கொண்டுள்ளது.
தற்போது வரை, பழுதுபார்ப்புச் சேவைகள் மூலம் இந்தியா பெறும் வருவாய் சுமார் 350 மில்லியன் டாலர் ஆகும்.