வாழ்விட இழப்பு காரணமாக கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய மிரிஸ்டிகா சதுப்புநிலங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக புதிய ஆய்வு எச்சரித்து உள்ளது.
இந்த நன்னீர் சதுப்புநிலங்கள் முக்கியமாக கேரளாவில் காணப்படுகின்றன, மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சிறிய அளவில் பரவியுள்ளன.
கேரளாவில் தற்போது செந்தூருணி வனவிலங்கு சரணாலயம், அஞ்சல் மற்றும் குளத்துப் புழை வனப்பகுதிகளில் 53 திட்டுகள் மட்டுமே உள்ளன.
அவை இயற்கையான நீர் தேக்கும் அமைப்புகளாக செயல்படுகின்றன, நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு உதவுகின்றன, வற்றாத நீரோடைகளைப் பராமரிக்கின்றன மற்றும் வெள்ளத்தை குறைக்கின்றன.
மரம் வெட்டுதல், வடிகால் மற்றும் நெல் வயல்கள், தோட்டப் பயிர்கள் மற்றும் பண்ணைகளாக மாற்றப்பட்டதே இவற்றின் வீழ்ச்சிக்கு காரணமாகும்.