TNPSC Thervupettagam

முக்கியமான கனிமங்கள் குறித்த இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பு

August 26 , 2026 10 hrs 0 min 30 0
  • முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகள் மற்றும் மின்னணு-கழிவுகளை மறுசுழற்சி செய்வது தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தியாவும் ஜப்பானும் புதுதில்லியில் விவாதித்தன.
  • முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்கும், வரையறுக்கப் பட்ட முதன்மை வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் வளச் சுழற்சியை மேற்கொள்வதில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தின.
  • தூக்கி எறியப்படும் மின்னணுப் பொருட்களிலிருந்து மதிப்பு மிக்க பொருட்களை மீட்டெடுக்க உதவும் மின்னணு-கழிவு மறுசுழற்சியை மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
  • இந்தியா-ஜப்பான் சுற்றுச்சூழல் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் அதே வேளையில், நிலையான மற்றும் சுழற்சிப் பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்பதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்