TNPSC Thervupettagam

முதலமைச்சரின் முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

August 22 , 2026 2 days 87 0
  • 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்காக முதலமைச்சரின் முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது.
  • இத்திட்டமானது பயனாளியின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அங்கீகரிக்கப் பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவச் சிகிச்சையை வழங்கும்.
  • இது புற்றுநோய் சிகிச்சை, மேம்பட்ட இதய அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் உயர்நிலை நோயறிதல் சேவைகள் உள்ளிட்ட முக்கியச் சிகிச்சைகளை உள்ளடக்கும்.
  • 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எவ்வித வருமான தகுதி நிபந்தனையும் இன்றி இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவார்கள்.
  • இத்திட்டம் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2024 ஆம் ஆண்டில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்தக் குடிமக்களுக்கும் அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதற்காக ஒன்றிய அரசு AB-PMJAY திட்டத்தை விரிவுபடுத்தியது.
  • தமிழ்நாட்டின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) 2018 ஆம் ஆண்டில் AB-PMJAY திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • இந்தியாவின் வயதான மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதியவர்களுக்கான சுகாதார அணுகலை வலுப்படுத்துவதை இந்தப் புதிய திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் ஐந்தில் ஒருவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருப்பார் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்