முதலமைச்சர் கிசான் கல்யாண் யோஜனா - மத்தியப் பிரதேசம்
August 20 , 2025 121 days 112 0
மத்தியப் பிரதேச ஆளுநர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், முதல்வர் கிசான் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 83 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 17,500 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுள்ளதாக அறிவித்தார்.
இந்தத் திட்டம் ஆனது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் பிரதமர் கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 6,000 ரூபாயுடன் கூடுதலாக இந்த நிதி உதவியும் வழங்கப்பட்டது.
நிதி உதவி ஆனது தலா 2,000 ரூபாய் என்ற அளவில் மூன்று சம தவணைகளில் நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் வழங்கப்பட்டது.
வருமான வரி செலுத்திய, அரசு வேலைகளை வகித்த அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளாக இருந்த விவசாயிகள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறுவதிலிருந்து விலக்கப்பட்டனர்.