TNPSC Thervupettagam

முதல் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் அணைகள் - குஜராத்

July 11 , 2026 5 days 55 0
  • குஜராத் மாநிலம் தனது முதல் இரண்டு காற்று நிரப்பப்பட்ட ரப்பர் அணைகளை சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஹெரான் ஆற்றின் குறுக்கேயும், தபி மாவட்டத்தில் உள்ள அம்பிகா ஆற்றின் குறுக்கேயும் கட்டி வருகிறது.
  • ராஜ்வசனா ரப்பர் அணை மற்றும் பதக்வாடி ரப்பர் அணை ஆகியவை நீர் சேமிப்பு, நீர்ப்பாசனம் மற்றும் வெள்ள மேலாண்மைக்காக தென் கொரியத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
  • காற்று நிரப்பப்பட்ட ரப்பர் அணையானது, நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உயர்த்தப்படும் அல்லது குறைக்கப்படும் ஊதக்கூடிய ரப்பர் பையைப் பயன்படுத்துகிறது.
  • இந்த இரண்டு திட்டங்களும் கூட்டாக ₹162 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டைக் கொண்டுள்ளதுடன் இவை SCADA (மேற்பார்வைக் கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப் படுத்தல் - Supervisory Control and Data Acquisition) தானியங்கி அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.
  • இந்த அணைகள் நீர்ப்பாசனத்திற்கு ஆதரவளிப்பதுடன், கனமழையின் போது அதிகப் படியான நீர் மற்றும் வண்டலை வெளியேற்ற அனுமதிப்பதன் மூலம் வெள்ளப் பெருக்குகளை நிர்வகிக்கவும் உதவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்