TNPSC Thervupettagam

உலகளாவிய LNG அறிக்கை, 2026

July 11 , 2026 5 days 73 0
  • சர்வதேச எரிவாயு ஒன்றியம் (IGU) சமீபத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய LNG (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) அறிக்கையை வெளியிட்டது.
  • உலகளாவிய LNG தொழில் மற்றும் சந்தைகள் குறித்த விரிவான மற்றும் நம்பகமான கண்ணோட்டத்தை வழங்குவதை இந்த அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சீனா மற்றும் இந்தியாவின் புதிய கட்டமைப்புகளால், 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய LNG 'மீண்டும் வாயுவாக்கும்' (regasification) திறன் அதிகரிப்பில் ஆசியா முன்னிலை வகித்தது என்பதுடன் இவை உலகளாவிய கூடுதல் திறனில் முறையே 24% மற்றும் 11.3% பங்களிப்பை அளித்தன.
  • உக்ரைன் வழியாகச் சென்ற ரஷ்ய எரிவாயு குழாய் வழித்தட சேவை (2025-இன் தொடக்கத்தில் காலாவதியானது) நிறுத்தப்பட்டதால், ஐரோப்பாவின் இறக்குமதி அளவு கணிசமாக அதிகரித்தது.
  • 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய LNG வர்த்தகம் 437 மில்லியன் டன்கள் என்ற சாதனை அளவை எட்டியது.
  • அமெரிக்கா, கத்தார், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிற உற்பத்தியாளர்களிடமிருந்து விநியோகம் அதிகரித்ததே இந்த வர்த்தக வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
  • 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடா மற்றும் மௌரிடானியா/செனகல் ஆகிய நாடுகள் புதிய LNG ஏற்றுமதி சந்தைகளாக இணைந்துள்ளன.
  • இந்தியா தனது எட்டு முனையங்கள் (terminals) வாயிலாக ஆண்டுக்கு 52.5 மில்லியன் டன்கள் (mtpa) அளவிலான 'மீண்டும் வாயுவாக்கும்' திறனைச் சேர்த்துள்ளது.
  • இந்த விரிவாக்கத்தின் மூலம், 2025-ஆம் ஆண்டில் 'மீண்டும் வாயுவாக்கும்' திறனில் ஸ்பெயினை முந்தி இந்தியா உலகின் நான்காவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.
  • குஜராத்தில் உள்ள தஹேஜ் LNG முனையம், உலகளவில் ஆறாவது பெரிய 'மீண்டும் வாயுவாக்கும்' வசதியாகத் திகழ்வதுடன், இந்தியாவின் முதன்மையான மற்றும் மிகப்பெரிய எரிசக்தி மையமாகவும் விளங்குகிறது.
  • இந்தியாவில் உரம், நகர எரிவாயு மற்றும் பொதுப் பயன்பாட்டுச் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
  • எரிசக்தி கலவையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (LNG) பங்கை அதிகரிக்க அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்